Tuesday, 1 March 2016

“தூய்மை இந்தியா” சிங்கப்பூரைப் பின்பற்றுமா?

இந்திய பிரதமர் மோடி “தூய்மை இந்தியா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி  ஈராண்டுகள்  நெருங்குகிறது.  திட்டம்  தொடங்கும் போது அனைவரும் விளம்பரத்துக்கு படம் எடுத்து  அமர்களமாக தொடங்கினார்கள். ஆனால்  இன்று எந்த நிலையில் இருக்கு என்று தெரியவில்லை.  மக்கள் மத்தியில் தாம் இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்திருக்க  வேண்டும் என்ற விழிப்புணர்வும் வந்ததாக தெரியவில்லை.  ஏன்? அந்த  திட்டம் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்கிறதே தவிர மக்கள் மனதில் ஒரு ஆழமாக  போய்  சேரவில்லை அதற்கு  அடிப்படை காரணம் அன்றாட “பழக்க வழக்கம்” முக்கிய பங்குவகிக்கிறது. 

தமிழில் ஒரு பழமொழி உண்டு “தொட்டில் பழக்கம்  சுடுகாடு வரை” அதாவது குழந்தை பருவத்திலேயே நல்ல பழக்க வழக்கங்களை பழகி நல்ல பண்புகளை வளர்த்துக் கொண்டால் அது  வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை நிலைத்திருக்கும். அந்த பழமொழியை நாம் பின்பற்றுகிறோமோ இல்லையோ,  சிங்கப்பூர் அரசாங்கம் சிறப்பாக பின்பற்றுகிறது. சிங்கப்பூர் அரசின் பாராட்டத்தக்க செயல்திட்டத்தை படியுங்கள்.  

பள்ளித் துப்புரவுப் பணியில் மாணவர்கள்

இவ்­வாண்டு இறு­திக்­குள் தொடக்­கப் பள்­ளி­யி­லி­ருந்து தொடக்கக் கல்­லூ­ரி வரை பயிலும் அனைத்து மாண­வர்­களும் தங்கள் பள்ளியின் சுற்றுப்­ பு­றத்­ துப்­பு­ர­வுப் பணியில் அன்றாடம் ஈடு­படுத்­தப்­படு­வர்.

மாண­வர்­களிடையே பராமரிப்பு, பொறுப்­பு­ணர்வை வளர்க்கும் நோக்கத்தில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கல்­வி­யமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை­யில் தெரி­வித்­தது. துப்­பு­ர­வுப் பணி பள்­ளி­யில் முதல் பாடம் தொங்கும் முன்னரோ, இடை­வேளை­யின் போதோ, பாடங்களுக்கு நடுவி லேயோ அல்லது பள்ளி முடியும் தறு­வா­யிலோ மேற்­கொள்­ளப்­ப­ட­லாம் என்று அமைச்சு கூறியது. மாண­வர்­கள் சுத்தம் செய்ய வேண்டிய பகு­தி­க­ளாக பொது இடங்கள், உண­வ­கங்கள், நடைக்­கூ­டம் ஆகியவை அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன.

ஸிங்னான் தொடக்­கப்­ பள்ளி, பார்க்­வியூ தொடக்­க­ப் பள்ளி, நியூடௌன் உயர்­நிலைப் பள்ளி ஆகியவை ஏற்கெனவே மாண­வர்­களை ஐந்து முதல் பத்து நிமி­டங்கள்­ வரை பள்­ளி­களில் துப்­பு­ர­வுப் பணி­களில் ஈடு­ப­டுத்தும் நடை­முறையைக் கொண்டு வந்­துள்­ளன.
ஜூரோங் வெஸ்ட்­டில் உள்ள ஸிங்னான் தொடக்­கப்­பள்­ளி­யில் இடை­வேளையின்­போ­தும் பள்ளி முடிந்து வீடு செல்­லு­முன்­ன­ரும் மாண­வர்­கள் துப்­பு­ர­வுப் பணியில் ஈடு­படு­கின்றனர்.
அத்­து­டன், குடும்பத்­தா­ரின் வீட்டுப் பணிகளில் எவ்வாறு உதவுகின்ற­னர் என்பதைப் பட்­டி­ய­லி­டும் வேலையும் தொடக்­க­ நிலை ஒன்று மாண­வர்­களுக்குத் தரப்­பட்டுள்ளது. பார்க்­வியூ தொடக்கப் ­பள்­ளி­யில் மாண­வர்­கள் பள்ளி நேரம் முடிந்த­தும் ஐந்து நிமிடங் களுக்கு தங்கள் பள்ளி அறைகளை துப்­பு­ரவு செய்கிறார்கள்.
பள்ளியைச் சுத்தம் செய்யும் ஸிங்னான் தொடக்­கப் பள்­ளி மாணவர்களுடன் உரையாடும் சிங்கப்பூர் தற்­கா­லிக கல்வி அமைச்­சர் (பள்­ளி­கள்) இங் சீ மெங். படம்: சிங்கப்பூர் தமிழ் முரசு 29/02/2016
இப்படி செய்வதனால் துப்புரவுப் பணியினை துப்புரவுத் தொழிலாளர்கள் தான் செய்யவேண்டும் என்ற எண்ணமும், அவர்கள் கீழானவர்கள் என்ற சிந்தனையும் மாணவப் பருவத்திலே அவர்கள் மனதில் தோன்றாமல் இருக்கும். மேலும் இருக்கும் இடத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்க்கும் வளரும்.
சிங்கப்பூர் அரசு செய்வது போல் நம் நாட்டிலும் பள்ளிகளிருந்து நாம் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தினால்  மாற்றங்களை படிபடியாக காணலாம். 

மாணவர்களுடன் மட்டும் நிறுத்திவிடாமல் இளைஞர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சி, சமுதாய இயக்கங்களை ஒருங்கிணைத்து  எந்தவித கட்சி, மத, சாதி பாகுப்பாடு பார்க்காமல் , ஒரு செயல் குழு அமைத்து ஓவ்வொரு ஊரிலும் செயல்படுத்தி மக்களை பழக்கப் படுத்தினால்  இந்தியா தூய்மை அடைவது மட்டுமல்லாமல் நல்லதொரு பண்பும் மக்களிடம் மேலோங்கும். ஆனால் இப்படி சிந்திக்குமா மோடி அரசு? 

No comments:

Post a Comment