Sunday, 6 March 2016

சிங்கப்பூர் நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் தமிழ் இசை நிகழ்ச்சி

 
'அருகினில்' எனும் தமிழ் இசை நிகழ்ச்சியை சிங்கப்பூர் ,இசையமைப்பைப்பாளர் குணசேகரன்  சிங்கப்பூரின் பழம்பெரும் நாடாளுமன்ற மன்றத்தில் வெற்றிகரமாக நேற்று (5/03/16) இரவு நடத்தினார்.

குணசேகரன் இசையமைத்து மற்றும் அவர் குழுவினர்கள் பாடிய பல இனிய பாடல்களைக் கொண்ட  'அருகினில்ஒலி வட்டை, விழாவில் கலந்துக்கொண்ட சிங்கப்பூர்  முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்  இரா..தினகரன்   சமூக சேவகி டாக்டர் உமா ராஜன், பானுமதி இராமச்சந்திரா முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டனர்.

வசந்தம் தொலைக்காட்சி  இந்திராவின் தொய்வில்லா நெறியாற்றலுடன் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குணசேகரனின் இசையில் மெட்டமைக்கப்பட்ட இனிய பாடல்கள் பாடப்பட்டன. நா,ஆண்டியப்பன், மா.அன்பழகன் , பனசை நடராஜன், பிச்சினிக்காடு இளங்கோபோன்ற சிங்கப்பூர் கவிஞர்கள் , பொன்னடியான், .விஜய் போன்ற தமிழநாட்டுக் கவிஞர்கள் ஆகியோரின் பாடல்கள், குணசேகரனின் இசையாக்கம் பெற்றவை..

பாடல்கள் பிறந்த விதம், இசை வடிவம் பெற்ற முறை, அவை லண்டன், இந்திய ஸ்டுடியோக்களில் ஒலிப்பதிவான பாங்கு அனைத்தையும் படமாக்கி நம் கண் முன் காட்டியது நன்கு ரசிக்கப்பட்டது. அவர் தனக்கு ஆதரவு அளித்தோருக்குஅங்கே நன்றி சொல்லத் தவறவில்லை.

சிங்கப்பூரில் அரசாங்க மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாக இருக்க காரணமான சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ அவர்களுக்கு நன்றி செலுத்தி நினைவுக் கூறும் வகையில் அவர் அமர்ந்திருந்த  நாடளுமன்ற நாற்காலியில் மலர்க்கொத்து வைத்திருந்தார்கள்.

சிங்கப்பூர் வரலாற்றில் முதன் முறையாக சிங்கப்பூரின் பழம்பெரும் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற தமிழ் நிகழ்ச்சி என்ற சிறப்பினைப் இந்நிகழ்ச்சி பெற்றது.
www.aruginil.com என்ற இணையதளத்தில் 'அருகினில்' பாடல்களை கேட்கலாம்.

No comments:

Post a Comment