Tuesday, 29 March 2016

அரிய நோயோடு போராடி வரும் கோவைப் பெண்.. சிகிச்சைக்கு உதவுங்கள்!

சிஏபிஎஸ் எனப்படும் அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர், மருத்துவச் செலவிற்கு கையில் பணமின்றி அவதிப்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மற்றவர்களைப் போல் சாதாரணமாக கணவர், 13 வயது மகன் என மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்து வந்துள்ளார் குமாரபாளையத்தைச் சேர்ந்த தேவி (38). ஆனால், திடீரென அவரது வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த துயரமான நிகழ்வு..

மூளைக் காய்ச்சலில் அவதிப்பட்ட தேவியின் கணவர், படுத்த படுக்கையாகி சில ஆண்டுகளில் காலமானார். அதனைத் தொடர்ந்து சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கியுள்ளது தேவிக்கு. முதலில் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தேவி, பின் மருத்துவரிடம் சென்றுள்ளார். தீவிர பரிசோதனைகளுக்குப் பின் அவருக்கு ‘கட்டோஸ்ட்ரோப்பிக் ஆண்டிபாஸ்போலிபிட் சிண்ட்ரோம்' எனப்படும் அரிய வகை நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். 

இந்த நோயின் தாக்கத்தால் அடிக்கடி ரத்தம் செல்லும் பாதையில் கட்டிகள் உருவாகத் தொடங்கின. இதனால், உடல் உறுப்புகளுக்கு தடைபட்டு, கீதாவின் உடல்நிலை மோசமானது. அதனைத் தொடர்ந்து கோவை கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் தேவி. கூலி வேலை செய்யும் தேவியின் பெற்றோர், கையில் இருந்த நகை, பணம் முழுவதையும் செலவழித்தும், கடன் வாங்கியும் அவருக்கு சிகிச்சைப் பார்த்து வருகின்றனர். ஆனால், தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சைப் பெற வேண்டிய நிலையில் தேவி இருக்கிறார். இதுவரை 50 பாட்டிலுக்கும் அதிகமாக ரத்தம் ஏற்றி அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்களாம். இனியும் தொடர்ந்து புதிய ரத்தம் செலுத்தினால் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியுமாம்.

எப்படியும் மகளின் உயிரைக் காப்பாற்றியே தீருவது என பாடுபட்டு வருகின்றனர் தேவியின் பெற்றோர். தேவியின் சிகிச்சைக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்த முடியவில்லை. காரணம் அரசு அளித்துள்ள நோய்கள் பட்டியலில் இந்த அரிய வகை நோய் இடம்பெறவில்லையாம். இதனால் மகளின் மருத்துவச் செலவிற்கு மேற்கொண்டு என்ன செய்வது என்ற கவலையில் உள்ளனர் தேவியின் பெற்றோர். நம்மால் முடிந்த உதவிகளை நாமும் செய்யலாம்... உதவ விரும்பும் நல் உள்ளங்கள் இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: 

தேவி த/பெ. கிருஷ்ணராஜ் 
55/8, ஆலன் காடு, ( சத்திய நாராயணன் மருத்துவமனை பின்புறம்) குமாரபாளையம் - 638183.

தொலைபேசி எண்: 9262041837 

Email முகவரி: devikpm78@gmail.com வங்கி 

Account Number : 34594106451

IFSC code: SBIN0007041

நன்றி: Oneindiatamil

No comments:

Post a Comment