இமெயில் எனப்படும் மின்னஞ்சல் முறையை கண்டு பிடித்த
ரே டாம் லின்சன் [Ray Tomlinson] தனது 74-ஆவது வயதில் காலமானார்.
அமெரிக்காவில் பிறந்து
மாஸாச்சூசெட்ஸ் பல் கலைக்கழகத்தில் பயின்று பட்டம்பெற்ற டாம்லின் சன், அர்பாநெட் சிஸ்டம் முறையில் நெட்ஒர்க் இணைப்
பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டரில் இருந்து இன்னொரு கம்ப்யூட்டருக்கு
கடிதங்களை அனுப்பும் முறையை 1971-ஆம் ஆண்டு முதன் முதலாக
கண்டுபிடித்தார். பின்னர் குறியீட்டுடன்
தூரத்தில் உள்ள இதர கம்ப்யூட்டர்களுக்கு அந்த தகவல்கள் போய்சேரும் புதிய
தொழில்நுட்பத்தை யும் வடிவமைத்தார்.
இன்று இமெயில் என்
றழைக்கப்படும் இந்த செலவில்லாத துரிதமான கடிதப் போக்குவரத்தின் தந்தையாக
விளங்கியரே டாம்லின்சன் தனது 74-ஆம் வயதில் கடந்த சனிக்கிழமை மார்ச்-5 காலமானார். அயராத உழைப்பு மற்றும் தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்கிய
அவரது மறைவுக்கு உலகின் பல நாடுகளில் இருந்து கோடிக் கணக்கான இணையதள வாசிகள்
இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கூகுளின் ஜிமெயில் குழுமமும் ரே டாம்லின்சன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளது.
பின்னாளில், 1978-ஆம் ஆண்டுவாக்கில் இந்த சேவையை மேலும் நவீனப்
படுத்திய சிவா அய்யாத் துரை என்ற தமிழர் இமெயில் சேவைக்கான காப்புரி மையை 1982ஆ-ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றார்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment