வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அமைப்பிற்கு 120 கோடி வரைஅபராதம்
வாழும்
கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உலக கலாச்சார விழா என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சியை யமுனா நதிகரையில் நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உட்பட 35 லட்சம் பேர் கலந்து கொள்ள இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால்
இந்த நிகழ்ச்சிக்கு லிவ் யமுனா என்னும் யமுனா நதி பாதுக்காப்பு இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பை சேர்ந்த மனோஜ் மிஸ்ரா கூறுகையில், “இந்த நிகழ்ச்சிக்காக 1000 ஏக்கருக்கு மேலான நிலத்தில் மேடைகள், சிறிய அறைகள், வாகன நிறுத்தும் இடம் மற்றும் மிதக்கும் பாலம் போன்றவை தயார் செய்யப்பட்டு வருகின்றன.
நதி நீரை தூய்மை செய்வதற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது அந்த பகுதியின் சூழியலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
நதி நீரை தூய்மை செய்வதற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது அந்த பகுதியின் சூழியலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த
குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 4 பேரைக் கொண்ட குழு ஒன்றை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. அந்த குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் வாழும் கலை அமைப்புக்கு ரூபாய் 120 கோடி வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் 45 முதல் 50 ஏக்கர் வெள்ள சமவெளி முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும்,
இது வெள்ள காலங்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது.
நன்றி: மாலைமலர் 02/03/16
No comments:
Post a Comment