உலக
கலாச்சார விழா எதிர்ப்பு
வாழும்
கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உலக கலாச்சார விழா என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சியை யமுனா நதிகரையில் மார்ச் 11 ம் தேதி முதல்
மார்ச் 13 வரை நடத்தி வருகிறார்.
சுமார்
35 லட்சம் பேர் கலந்து கொள்ளுவதாக கூறப்படும் இந்த நிகழ்ச்சிக்காக 1000 ஏக்கருக்கு மேலான நிலத்தில் மேடைகள், சிறிய அறைகள், வாகன நிறுத்தும் இடம் மற்றும் மிதக்கும் பாலம் போன்றவைகளை உருவாக்கியுள்ளார்கள். அதனால் யமுனை
நதி மாசுபடுத்தப்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் லிவ் யமுனா என்னும் யமுனா நதி பாதுக்காப்பு இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
120 கோடி
வரை அபராதம் விதிக்க வேண்டும்
இவர்களின்
குற்றச்சாட்டை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த இந்திய
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 4 பேர்க் கொண்ட குழு அறிக்கையில்
வாழும் கலை அமைப்புக்கு ரூபாய் 120 கோடி வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
ரூ.100
கோடி அபராதம் விதித்தது
அந்த
அறிக்கைபடி விசாரணை இரண்டு நாட்களாக நடைபெற்ற விசாரணையின் முதல்நாள் தீர்ப்பு யமுனை நதிக்கரையை மாசுப்படுத்தியதற்காக ரவிசங்கருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அபராதம்
ரூ.5 கோடியாக குறைப்பு
ஆனால்
இரண்டாவதுநாள் வந்த தீர்ப்பு ஆச்சரியமான தீர்ப்பு ரூ.100 கோடிக்கு பதில் ரவிசங்கருக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அபராதம்
செலுத்த மாட்டேன்
அடுத்து
வந்த செய்தி சிறை சென்றாலும் செல்வேனே தவிர, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.5 கோடி அபராதத் தொகையை செலுத்த மாட்டேன் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.
தவனை
முறையில் அபராதம்
ஸ்ரீ
ரவிசங்கரின் இக்கருத்துக்கு எதிர்ப்பு அதிகரித்ததால் மீண்டும் தேசிய பசுமை தீர்பாயத்தில் வாழும் கலை அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உடனடியாக ரூ. 5 கோடி திரட்ட முடியாது'' அதனால் அபராத
தொகையில் ரூ.25 லட்சத்தை இன்று (மார்ச் 11) செலுத்தி விட்டு, மீதமுள்ள தொகையை 3 வாரங்களுக்குள் செலுத்துவதாகவும் அந்த அமைப்பு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
நீதிபதி
அதிருப்தி
எனினும்
தீர்ப்பாயத்தின் உத்தரவை விமர்சித்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் செயலுக்கு, நீதிபதி சுவதந்தர் குமார் கடுமையான அதிருப்தி வெளியிட்டார். அவர் கூறுகையில், ‘ரூ.5 கோடி அபராதம் செலுத்துவதற்கு பதிலாக ஜெயிலுக்கு செல்வோம் என்று நீங்கள் (ரவிசங்கர்) கூறியது சரிதானா? புகழ்பெற்ற ஆன்மிக தலைவரான உங்களிடம் இருந்து இதுபோன்ற ஒரு கருத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. என்று கடுமையான அதிருப்தியை தெரிவித்தார்.
பிரதமர்
மோடி கலந்துக்கொண்டார்.
இந்திய
தேசிய பசுமை தீர்ப்பாயம் அபராதம் வித்த ஒரு நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துக்கொண்டார். 35 லட்சம் பேர் கூடுவர் என எதிர்பார்க்கப்படும் அந்த விழா
காரணமாக, சுற்றுப்புறத்திற்கு நிரந்தர பாதிப்புகள் ஏற்படக் கூடுமெனக் குறைகூறப்பட்டு வருகிறது. அதுபோல், எல்லாவற்றையுமே குறைகூறிக் கொண்டிருக்காமல், உலகம் வியக்கும் இந்தியப் பண்பாட்டின் மீது பெருமிதம் கொள்ளலாம் என்றார் திரு. மோடி.
பாஜக
மத்திய மந்திரிகள், முதல்-அமைச்சர்கள் பங்கேற்பு
சர்ச்சைக்குரிய
உலக கலாச்சார விழா நிகழ்ச்சியில் பாஜக மத்திய மந்திரிகள், முதல்-அமைச்சர்கள் பங்கேற்பு
நேற்றைய
நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய
பிரதேசம் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவீஸ், சத்தீஸ்கர் முதல்-மந்திரி ராமன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒரு
நிகழ்ச்சி சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. இந்தியாவின் இயற்கை வளங்களை அழித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதனால் பல பின்விளைவுகளை அந்த
பகுதி மக்கள் சந்திக்கக்கூடும் என்பதை உறுதி செய்து “வாழும் கலை” அமைப்புக்கு தண்டணை அளித்துள்ளார்கள்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு “எல்லாவற்றையுமே குறைகூறிக் கொண்டிருக்காமல் உலகம் வியக்கும் இந்தியப் பண்பாட்டின் மீது பெருமிதம் கொள்ளலாம்” என்கிறார் என்றால் அதுதான் நாட்டின் மக்களுக்கு சரியான வழிகாட்டுதலா?
ஆனால் அந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு “எல்லாவற்றையுமே குறைகூறிக் கொண்டிருக்காமல் உலகம் வியக்கும் இந்தியப் பண்பாட்டின் மீது பெருமிதம் கொள்ளலாம்” என்கிறார் என்றால் அதுதான் நாட்டின் மக்களுக்கு சரியான வழிகாட்டுதலா?
மேலும்
அந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல் அமைச்சர்கள் என பாஜகவை
சாந்தவர்களாக கலந்துக் கொண்டுள்ளார்கள். காரணம் என்ன? ஸ்ரீ
ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நவீன முறையில் இந்துகளின் ஆன்மிகத்தை பரப்புகிறார்கள். அதனால் அந்த நிகழ்ச்சியினால் யமுனா நதி பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்ற பார்வையில் தான் கலந்துக்கொண்டு பேசுகிறார்கள்.
மேலும் மத்திய அரசின் கலாசார அமைச்சகம் சார்பில் வாழும்கலை அமைப்புக்கு
ரூ. 2.5 கோடி இந் நிகழ்ச்சிக்கு வழங்கியுள்ளார்கள்.
இந்திய
அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றுவேன் என்று உறுதி மொழி எடுத்த பிரதமர், மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்கள் எல்லாம் கலந்துக்கொண்டு பாராட்டும் போது ஸ்ரீ ரவிசங்கர் அபராதம் செலுத்த மாட்டேன் என்று கூறுவதற்கு ஏன் பயப்பட போகிறார்.
இப்படிபட்ட
அரசியல் செல்வாக்கு பெற்ற ஆன்மிக அமைப்புக்கு எப்படி இந்திய
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரிகள் 120 கோடி அபராதம் விதிக்க தைரியம் வரும்?
எப்படி எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் தீர்ப்புக் கூறமுடியும்? ஆதனால் 120 கோடி சேத மதிப்பீடு 5 கோடியாக குறைந்து அபராதம் விதிக்கப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
எப்படி எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் தீர்ப்புக் கூறமுடியும்? ஆதனால் 120 கோடி சேத மதிப்பீடு 5 கோடியாக குறைந்து அபராதம் விதிக்கப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
இந்தியாவில் சட்டம் என்பது சாதரண தனி மனிதனுக்கும் செல்வாக்கு பெற்ற மனிதருக்கும்/ அமைப்புக்கும் சரி சமமாக செயல்படுகிறதா என்பது கேள்விகுறியே?
No comments:
Post a Comment