சிங்கப்பூரில்
முதன்முறையாக முழு நேர தமிழ்மொழி இளங்கலைப் பட்டப்படிப்பு (B.A. Ed) இவ்வாண்டு தொடக்கம் காணவிருக்கிறது. கல்வி அமைச்சும் தேசிய கல்விக் கழகமும் ஒன்றிணைந்து நீண்டகால கூட்டு முயற்சியின் பயனால் புதிய கல்வி ஆண்டில், அதாவது எதிர்வரும் ஜூலை மாதத்தில் பட்டப்படிப்பு தேசிய கல்விக் கழகத்தில் தொடங்கும். உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட தமிழ்மொழி கற்பித் தல் தொடர்பான தகவல் நிகழ்ச்சியில் இவ்விவரங்கள் அளிக்கப் பட்டன.
முழுநேரமாக
நான்கு ஆண்டுகளுக்கு நடத்தப்படவிருக்கும் இப்பட்டப்படிப்பை மேற்கொள்ள தொடக்கக் கல்லூரியில் ‘ஏ’ நிலை கல்வித் தகுதி பெற்ற, பல துறைத் தொழிற்கல்லூரியில்
பட்டயக் கல்வியை முடித்த, ‘ஐபி’ எனப்படும் அனைத்துலக பெக்கலரெட் கல்வித் தகுதி பெற்ற மாணவர்கள் விண் ணப்பிக்கலாம். அத்துடன், தமிழ்மொழிக் கற் பித்தலில் ஆழ்ந்த விருப்பமும் மாணவர்களுடன் பணியாற்ற ஆர் வமும் ஆசிரியர் பணியில் மன நிறைவும் இருப்பது
அவசியம். தமிழ்மொழியில் இளங்கலைப் பட்டப்படிப்புக் குறித்த தகவல்களு டன் கல்வியியல் பட்டயக் கல்வி (Dip. Ed), பட்டமேற்படிப்புப் பட் டயக் கல்வி (PGDE) ஆகிய பிற ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் பற்றிய விவரங்களும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டன.
இப்பயிற்சித் திட்டங்களின் மூலம் மாணவர்கள் பெறவிருக்கும் அனுகூலங்கள் குறித்து மூத்த கல்வியாளர்கள், தலைமை முதன்மை ஆசிரியர், தேசிய கல்விக் கழக விரிவுரையாளர்கள் வந்திருந்த சுமார் 160 மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கம் அளித்தனர்.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நேற்று நடந்த தகவல் நிகழ்ச்சியில் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவு 1, தாய்மொழிகள் துறை துணை இயக்குநர் திருவாட்டிச் சாந்தி செல்லப்பனிடம் (நடுவில் வெள்ளை உடையில் இருப்பவர்) ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் குறித்த ஐயங்களை மாணவர்களும் பெற்றோர்களும் கேட்டறிகின்றனர்.
நன்றி: சிங்கப்பூர் தமிழ் முரசு 28/02/2016
No comments:
Post a Comment