Thursday, 3 March 2016

தேர்தல் நேரத்தில் செய்யும் தொண்டு.

தமிழ் நாட்டின் தேர்தல் பற்றி சமூக ஊடகங்களில் இப்போது பல இளைஞர்கள் தி.மு.க – அ.தி.மு.க வேண்டாம், திராவிட கட்சி ஆட்சி வேண்டாம் என்ற படங்களுடன் கூடிய பதிவை share செய்கிறார்கள்.  அப்படி செய்வதனால் மாற்றம் ஏற்படுமா? அது சரியா? ஒரு விரைவு கண்ணோட்டம்.


யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று கூற நாட்டின் குடிமகன்களுக்கு முழு உரிமை உண்டு!

அதே நேரத்தில் அப்படி கூறுபவர்கள்

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்லக்கூடிய  முக்கிய கடமையும் உண்டு! என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உரிமையை பேசி கடமையை செய்யவில்லை என்றால்  மாற்றத்தை கொண்டு வரமுடியாது.

மாற்றம் என்பது உரிமையை பேசுவதால் மட்டும் வருவதில்லை. கடமையை தவறாமல் செய்வதனால் வருவது.

எந்த எந்த கட்சிகள் ஆட்சி வரக்கூடாது என்று கூறும்போது மறக்காமல், யார்? எந்த கட்சி? ஆட்சிக்கு வரவேண்டும் என்ற உங்களின் விருப்ப கட்சியையும் மறைக்காமல் குறிப்பிடுங்கள்.

வேண்டாம் என்று கூறுவதற்கு துணிவும் தெளிவும் தேவையில்லை

ஆனால் இவர்தான், இந்த கட்சிதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறுவதற்கு துணிவும் தெளிவும் அவசியம்.

அப்படி துணிவும் தெளிவும் உங்களிடம் இல்லையென்றால் மவுனமக சென்று வாக்களியுங்கள் உங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு.

ஆனால் நீங்கள் விரும்பும் கட்சி / தலைவர் பெயரை குறிப்பிடாமல் இவர் வேண்டாம், அந்த கட்சி வேண்டாம் என்று facebook/twitter/whatsup-ல் பதிவு செய்து share செய்யாதீர்கள்.

அப்படி செய்வதனால் நாட்டில் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படாது. மாறாக சமூக சீர்கேடும், ஏமாற்றும் செயலும்தான் பெருகும் அதனால் நாடு பின்னோக்கிதான் செல்லும்.   

ஒரு நாட்டில் மாற்றமும் முன்னேற்றமும் அரசியல் கட்சியை சார்ந்து மட்டும் ஏற்படபோவதில்லை. வ்வொரு தனிமனிதனின் தெளிவான சிந்தனையும், துணிவாக செயல்படுத்தும் கடமையும் சார்ந்து ஏற்படுவது.

அடுத்தவரை குறை சொல்வது மிக எளிது, அதுவே நாம் சரியாக செய்வது தான் மிக மிக கடினம்.

குறை என்று தெரிந்தால் அதனை சரிசெய்ய வழிகாண வேண்டும். அப்படி செய்யாமல் வெறும் குறை, குறை என்று கூச்சலிட்டால் குழப்பம்தான் வரும். தீர்வு கிடைக்காது, குறை நிறையாகாது.

முடிந்தால் இவர் வேண்டும் என்று ஒரு தலைவரை ஒரு கட்சியை கூறுங்கள். இல்லையென்றால் குழப்பத்தை ஏற்படுத்தாமல் மவுனமாக தேர்தல் தேதியில் சென்று வாக்களியுங்கள்.


அப்படி செய்தால் அதுவே நாம் நம் சமூகத்துக்கும், நாட்டுக்கும் செய்யும் தொண்டு.

No comments:

Post a Comment