Saturday 20 February 2016

எங்கும் எதிலும் சர்க்கரை மயம்

பிரிட்டனில் உள்ள முன்னணி காப்பிக் கடைகளிலும் துரித உணவகங்களிலும் வழங்கப்படும் சுடுபானங்களில் சேர்க் கப்படும் சர்க்கரையின் அளவைக் கேட் டீர்கள் எனில் நீங்கள் மலைத்துப் போவது நிச்சயம். ‘ஆக்ஷன் ஆன் சுகர்எனும் பிரிட்டிஷ் அறநிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. மொத்தம் 131 நறுமண சுடுபானங் களை ஆய்வுக்கு உட்படுத்திய அந்த நிறுவனம், அதில் 98% பானங்களில் அவற்றின் மீது சிவப்பு எச்சரிக்கை வில்லை ஒட்டும் அளவுக்கு அதிகப் படியான சர்க்கரை இருப்பதைக் கண்டறிந்தது.

அவற்றில் மூன்றில் ஒரு பானம், ஒரு கலன் கோக்க கோலாவில் உள்ளதைப் போல அல்லது அதற்கும் அதிகமான சர்க்கரை அளவைக் கொண்டுள்ளது. ஒரு கலன் கோக்க கோலாவில் ஒன்பது தேக்கரண்டி சர்க்கரை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக அதிகமாக, ஸ்டார்பக்ஸ் நிறு வனத்தின் பெரிய (வென்டி) கிண்ணஹாட் மல்டு ஃப்ரூட்பானத்தில் (படம்) 25 தேக்கரண்டி சர்க்கரை இருப்பது கண்ட றியப்பட்டது. பிரிட்டனின் இன்னொரு முன்னணி காப்பிக் கடை குழுமமானகோஸ்டா கஃபேயின் பெரிய அளவுசாய் லாட்டேவில் 20 தேக்கரண்டி சர்க்கரை இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. (நன்றி: தமிழ் முரசு சிங்கப்பூர் 20/02/16)

எங்கும் எதிலும் சர்க்கரை மயமாக இருப்பதால் எதை உண்டாலும் பார்த்து கவனமாக உண்ணுங்கள். முடிந்த வரை இயற்கை உணவை வீட்டில் தயாரித்து உண்ண பழகுங்கள். 

No comments:

Post a Comment