Monday 23 May 2016

கடவுளின் கொள்கையை பின்பற்றினால் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தை தடுக்க முடியும்

வாக்காளர்கள் ஓட்டுக்கு  பணம் வாங்கி கொண்டு ஓட்டுளிப்பது இப்போது பெரும் பிரச்சினையாக உள்ளது.

வெற்றிபெறுவதற்கு வாய்ப்புள்ள வசதியுள்ள வேட்பாளர்கள் கண்டிப்பாக ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள் அதை எந்த தேர்தல் ஆணையமும் தடுக்க முடியாது. (தேர்தல் ஆணையமே ஒரு சார்பு நிலையாக இருப்பது வருந்ததக்க செய்தி) காரணம் வேட்பாளர்களின் பணத்தை கொடுப்பதே அந்த பகுதியில் உள்ள மக்கள்தான் (கட்சி உறுப்பினர்கள்). எந்த வேட்பாளரும் நேரடியாக வாக்காளாரிடம் பணம் கொடுப்பது கிடையாது (ஒரு சில இடங்களை தவிர).

இப்படி பணம் கொடுப்பது கட்சி பாகுபாடின்றி நடைபெறும் அது எல்லா கட்சிக்கும் பொருந்தும்.  சில கட்சிகளில் தலைமையின் உத்தரவின் பெயரில் பணம் கொடுக்கப்படும், சில கட்சிகளில் தலைமை உத்தரவு இல்லாமலேயே வேட்பாளர்களே கொடுப்பார்கள். காரணம் அவர்கள் போட்டியிட சீட் வாங்கும்போதே அந்த தொகுதியில் எனக்கு செல்வாக்கு உள்ளது நான் ஜெயித்துவிடுவேன் என்ற உத்தரவாதம் கொடுக்கிறார்கள். அவர்கள் போட்டியிடுவது பதவிக்காக என்பதை யாரும் மறந்துவிட முடியாது. ( ஒரு சில வேட்பாளர்களுக்கு விதிவிலக்கு உண்டு).

நாம் அனைவரும் நமக்கு வேண்டியதை பணம் கொடுத்து கேட்க வேண்டும் என்ற மனநிலையில்தான் வளர்கிறோம். அதனால் எந்த செயலை நாம் செய்யும்போதும் நாம் பணம் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளோம் அதன் பெயர்கள்தான் வித்தியாசம்(அதை பற்றி தனி கட்டுரை பிறகு இணைக்கப்படும்)


கோயிலில் உள்ள கடவுளிடம் கோரிக்கையை வைத்து வேண்டிக்கொள்ளும் போதே உண்டியலில் காசு போடுகிறேம். அர்ச்சனை தட்டில் அய்யருக்கு பணம் கொடுக்கிறோம். கடவுளுக்கு பால்/சந்தனம்/பட்டா அபிஷேகம், தேங்காய் உடைத்தல்..etc…, etc…, என்று பல காணிக்கை செலுத்திதான் நாம் எடுக்கும் முயற்சி வெற்றிபெற கடவுள் உதவவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.

எந்த ஒரு கடவுளும்  தனக்கு பணம் காணிக்கை செலுத்தினால்தான் உங்களுக்கு ஆசிர்வதிப்பேன் என்றும், உதவுவேன் என்றும் கூறவில்லை. ஆனால் நாம் தான் நம்முடைய சக்திக்கு ஏற்ப தொடர்ந்து செய்கிறோம்.

ஆனால் கடவுளின் கொள்கை ரொம்ப தெளிவு அதாவது நீங்கள் எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும், காணிக்கை செலுத்தினாலும் கடவுள் அமைதியாக அனைத்தையும் வாங்கிக்கொண்டு அமைதியாகதான் இருப்பார்.

பிறகு எப்படி வெற்றிபெறுவோம் என்றால் நாம் எடுத்துக்கொண்ட காரியத்தில் நாம் உண்மையாக உழைத்தால் மட்டும்தான் வெற்றி அடைவோம்.

அதனால் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், கொடுக்கவில்லையென்றாலும் நல்லது செய்யும், நல்ல திட்டங்களை செயல்படுத்தும் (10% கமிஷன் வாங்கினாலும் பராயில்லை)வேட்பாளர்களுக்கு மட்டும்தான் ஓட்டுப்போடுவோம் என்று மக்கள் முடிவு எடுத்து ஓட்டுப்போட்டால் கண்டிப்பாக நம் நாட்டில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தை ஒழித்துவிடலாம்.  [இது யதர்த்தமான கட்சி சார்பற்ற சிந்தனை/ யோசனை].

அல்லது.


தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையமே வாக்குசாவடிக்கு வந்து ஓட்டு அளித்தால் ஓட்டு போடுபவர்களுக்கு பணம் கொடுப்போம் என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தினால். 100% மக்களும் ஓட்டு போடுவார்கள் அதனால் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தையும் தடுக்க / குறைக்க முடியும்.

                                                                                                                                              -கபூ-


குறிப்பு: வாக்காளர்கள் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கையுடைவர்கள் என்பதால் இந்த பதிவில் கடவுள் உதாரணம் பயன்படுத்தப் பட்டுள்ளது]