Tuesday 23 February 2016

முதலில் விட்டுக்கொடுப்பது யார்?


பல சிக்கல்கள், பெரும் கலவரமாக, விரிசலாக, சண்டையாக, கொலையாகக் கூட முடிவதற்கு முதன்மைக் காரணம், யார் ஒதுங்கிப் போவது? யார் விட்டுக்கொடுப்பது என்பதுதான்.

 கணவன்_மனைவி, பெற்றோர்_பிள்ளை, அன்பு நண்பர் என்று பல உறவுகளிலும் இவை வருகின்றன.

 உயிருக்குயிரான உறவு கணவன்_மனைவி உறவு. பாசம் மிக்கது.
பெற்றோர்_பிள்ளை உறவு. பற்றும், அன்பும் உடையது நட்பு. அப்படியிருக்க எப்படி விரிசல், மோதல், கொலை வருகிறது?

 விட்டுக் கொடுத்து, ஒதுங்கிப் போகாமல், நீயா? நானா? என்ற தன்முனைப்பு வரும்போதே இவை வருகின்றன.

 பிரச்சினை தொடங்கும்போதே ஒருவர் விட்டுக் கொடுத்தால் அப்போதே அது தீர்ந்து விடும்.

யார் விட்டுக் கொடுப்பார் தெரியுமா?

யார் அன்பு, பாசம், பற்று அதிகம் உடையவர்களோ அவர்களே விட்டுக் கொடுப்பர்.

ஆக, பிரச்சினை வரும்போது, உணர்ச்சிவசப்பட்டு மோதாமல் யார் அதிகம் பாசம் உடையவர் என்று காட்ட முயலுங்கள். பிரச்சினை மறைந்து பிணைப்பு ஏற்படும்.

நன்றி: மஞ்சை வசந்தன் முகநூல்

No comments:

Post a Comment