Friday 11 March 2016

திருக்குறளுக்கு ஒரு இனிய, எளிய புரட்சி உரை!

வள்ளுவரின் திருக்குறளுக்குப் பலரும் உரையெழுதியுள்ளனர் - பரிமேலழகர், மணக்குடவர் தொடங்கி பிறகு .. சிதம்பரனார்; புரட்சிக் கவிஞர், திருக்குறளார்  வீ. முனுசாமி, புலவர் குழந்தை, கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற பலரும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு உரையெழுதியுள்ளார்கள்!

பெரியார் சென்னையில் (ஜனவரி 15,16 - 1949) மாபெரும் திருக்குறள் மாநாட்டினை அறிஞர் அண்ணா போன்றாரை உடன் வைத்து, பெரும்புலவர் பெருமக்களையும், பேராசிரியர்களையும் அழைத்து குறளைப் பொது மக்களிடம் போகும்படிச் செய்ய ஒரு திருப்பத்தை உருவாக்கினார்கள்.

அதுவரை வள்ளுவர் குறள் புலவர் வீட்டுப் புத்தக அலமாரிக்குள்ளே இருந்தது; பொது மக்கள் மன்றத்திற்கு வந்ததுடன், மேலே காட்டிய பல பகுத்தறிவாளரின் உரையெழுதும் பயனுறு பணி நடைபெற்றது.

புரட்சிக் கவிஞரின் திருக்குறள் உரை முழுமை பெற்றுக் கிடைக்கும் நிலை இல்லை என்பது நமக்கோர் இழப்பாகும்!
அண்மையில், பெரம்பலூர் பகுத்தறிவுக் கவிஞர் முத்தரசன் அவர்கள், என் குரலில்   ‘திருக்குறள்என்ற ஒரு அருமையான கையடக்க நூலாக, ஒவ்வொரு குறளுக்கு நேராக  உரை, நடை எளிதில் புரியும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு, ‘மெய்ப் பொருள்கண்டுள்ள நூலை, அவர் தர நான் படித்தேன்; சுவைத்தேன் -மலைத்தேன். (அது மலைத் தேனுங்கூடத்தான்!)

கடவுள் வாழ்த்துஎன்பது திருக்குறளில் திருவள்ளுவர் எழுதியது அல்ல; அது இடைச் செருகல் என்று தமிழறிஞர் கப்பலோட்டிய தமிழன், ஒப்பற்ற தியாகச் செம்மல் ..சி. வரையில் குறிப்பிட்டுள்ளனர்.

பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு தந்தை பெரியார் அவர்கள் இந்த வாழ்த்து அதிகாரம் பற்றிக் குறிப்பிடுகையில், தலைமைப் பண்புகள் என்றே பொருள் பொதிந்துக் கூறினார்!

எந்த இடத்திலும்கடவுள்என்ற சொல்லே இல்லை - தலைப்பிட்டவர்கள்கடவுள் வாழ்த்துஎனக் கூறி தொகுத்தமையால் அது தொடர்கிறது. எனவேபாயிரம்என்றே தலைப்பிட்டுள்ளார்!

பலருக்கு மாற்றிச் சிந்திக்கத் தெளிவுமில்லை; தெளிவுற்றவர்களுக்கு; ... துணிவுமில்லை.

இந்நூல் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் ஈர்த்துப் படிக்கத் தூண்டும் வகையில் பகுத்தறிவுத் தேனில் வள்ளுவர் கருத்தினை விருந்தாகப் படைத்துள்ளார் கவிஞர் முத்தரசன் அவர்கள்! புலவர் வெற்றியழகன் அவர்களது அணிந்துரை சிறப்பானது.

இதைச் சிலர் ஏற்கலாம்; பலர் தள்ளலாம்! அதுபற்றிக் கவலைப்படாது துணிந்துப் பகுத்தறிவில் தோய்ந்த சரியான பார்வையுடன் இவர் குரல் ஒலிக்கிறது! அதில் திருக்குறள் தான் ஒலிக்கிறது; வேறு ஒலியல்ல; பலியான தமிழர்மீள புலி போன்ற பாய்ச்சல் இது! எடுத்துக்காட்டாக முதல் அதிகாரப் பொருள் இதோ!
 நன்றி: கி.வீரமணி,விடுதலை

No comments:

Post a Comment