Thursday 24 March 2016

சிங்கப்பூரில் தானியக்க (ATM) வங்கி இயந்திரங்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூர் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான தானியக்க (ATM) இயந்திரங்களில் தமிழிலும் பணப் பரிவர்த்தனைக்கு வசதி செய்யப்படும் என்று DBS அறிவித்துள்ளது.
DBS, POSB தானியக்க வங்கி இயந்திரங்களில் இதுவரை ஆங்கிலம், மலாய், மாண்டரின் மொழிகள் மட்டுமே இருந்து வந்தனஅதனால் தமிழ் மொழி மட்டுமே தெரிந்திருந்தவர்கள் வங்கி இயந்திரங்களை பயன்படுத்த சிரமப்பட்டனர். வங்கி இயந்திரங்களில் தமிழ் வேண்டும் என்ற வேண்டுகோளை அத்தகையோர் பல ஆண்டுகளாக விடுத்து வந்தனர்
சிங்கப்பூர் முழுவதும் உள்ள தானியக்க வங்கி இயந்திரங்களை DBS, POSB வங்கிகள் மேம்படுத்தி வருகின்றனஅதன் ஒரு பகுதியாக சுமார் 1100 தானியக்க வங்கி இயந்திரங்களில் தமிழிலும் பணப் பரிவர்த்தனைக்கு வசதி செய்யப்படவுள்ளது. 
அதற்கான பணிகள் இவ்வாண்டு ஜூனில் பூர்த்தியாகும் என்று DBS இன்று அறிவித்தது.மூத்தவர்கள் தானியக்க வங்கி இயந்திரத்தை பயன்படுத்துவதை எளிமையாக்கவும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளனபல மாதங்களாக நடத்தப்பட்ட முன்னோடி ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன 
தானியக்க வங்கி இயந்திரங்களில் தமிழைப் புகுத்துவதற்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டது வங்கிதமிழாக்கம் சுருக்கமாகவும்,
எளிமையாகவும் இருக்க வேண்டுமென்பதற்காக சுமார் 150 மணி நேரம் செலவிடப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது
DBS வங்கியைத் தொடர்ந்து மற்ற முக்கிய வங்கிகளும் அதன் தானியக்க இயந்திரங்களில் தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ் மட்டுமே தெரிந்த மூத்த குடிமக்களுக்கும், வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அது அனுகூலமாக விளங்கும்.

DBS, POSB தானியக்க வங்கிகளில் தமிழ் (வீடியோ)



                                                                                                        நன்றி: செய்தி 21/03/16, சிங்கப்பூர்.

No comments:

Post a Comment