Tuesday, 29 March 2016

அரிய நோயோடு போராடி வரும் கோவைப் பெண்.. சிகிச்சைக்கு உதவுங்கள்!

சிஏபிஎஸ் எனப்படும் அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர், மருத்துவச் செலவிற்கு கையில் பணமின்றி அவதிப்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மற்றவர்களைப் போல் சாதாரணமாக கணவர், 13 வயது மகன் என மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்து வந்துள்ளார் குமாரபாளையத்தைச் சேர்ந்த தேவி (38). ஆனால், திடீரென அவரது வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த துயரமான நிகழ்வு..

மூளைக் காய்ச்சலில் அவதிப்பட்ட தேவியின் கணவர், படுத்த படுக்கையாகி சில ஆண்டுகளில் காலமானார். அதனைத் தொடர்ந்து சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கியுள்ளது தேவிக்கு. முதலில் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தேவி, பின் மருத்துவரிடம் சென்றுள்ளார். தீவிர பரிசோதனைகளுக்குப் பின் அவருக்கு ‘கட்டோஸ்ட்ரோப்பிக் ஆண்டிபாஸ்போலிபிட் சிண்ட்ரோம்' எனப்படும் அரிய வகை நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். 

இந்த நோயின் தாக்கத்தால் அடிக்கடி ரத்தம் செல்லும் பாதையில் கட்டிகள் உருவாகத் தொடங்கின. இதனால், உடல் உறுப்புகளுக்கு தடைபட்டு, கீதாவின் உடல்நிலை மோசமானது. அதனைத் தொடர்ந்து கோவை கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் தேவி. கூலி வேலை செய்யும் தேவியின் பெற்றோர், கையில் இருந்த நகை, பணம் முழுவதையும் செலவழித்தும், கடன் வாங்கியும் அவருக்கு சிகிச்சைப் பார்த்து வருகின்றனர். ஆனால், தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சைப் பெற வேண்டிய நிலையில் தேவி இருக்கிறார். இதுவரை 50 பாட்டிலுக்கும் அதிகமாக ரத்தம் ஏற்றி அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்களாம். இனியும் தொடர்ந்து புதிய ரத்தம் செலுத்தினால் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியுமாம்.

எப்படியும் மகளின் உயிரைக் காப்பாற்றியே தீருவது என பாடுபட்டு வருகின்றனர் தேவியின் பெற்றோர். தேவியின் சிகிச்சைக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்த முடியவில்லை. காரணம் அரசு அளித்துள்ள நோய்கள் பட்டியலில் இந்த அரிய வகை நோய் இடம்பெறவில்லையாம். இதனால் மகளின் மருத்துவச் செலவிற்கு மேற்கொண்டு என்ன செய்வது என்ற கவலையில் உள்ளனர் தேவியின் பெற்றோர். நம்மால் முடிந்த உதவிகளை நாமும் செய்யலாம்... உதவ விரும்பும் நல் உள்ளங்கள் இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: 

தேவி த/பெ. கிருஷ்ணராஜ் 
55/8, ஆலன் காடு, ( சத்திய நாராயணன் மருத்துவமனை பின்புறம்) குமாரபாளையம் - 638183.

தொலைபேசி எண்: 9262041837 

Email முகவரி: devikpm78@gmail.com வங்கி 

Account Number : 34594106451

IFSC code: SBIN0007041

நன்றி: Oneindiatamil

Monday, 28 March 2016

நுங்கில் உள்ள மருத்துவ குணங்கள்

தாகத்தை தணித்து மோகத்தை தூண்டும் இயற்கையாக கிடைக்கும் நுங்கு கோடை காலத்தில் மனிதர்களைப் பாதுகாக்க இயற்கை அளித்த நல் வாய்ப்பாகும். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அடங்காத தாகம் நுங்கு சாப் பிட்டால் அடங்கும். உடலும் புத்துணர்ச்சி பெறும்.

நுங்கில் வைட்டமின் பி, சி மற்றும் இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், புரத சத்துகள் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்போருக்கு நுங்கு சிறந்த மருந்து.உடலிலுள்ள  கொழுப்பைக் கட்டுப்படுத்துவதோடு, எடையைக் குறைக்கும் தன்மையும் கொண்டது.

நுங்கு நீர் பசியை தூண்டும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே சிறந்த மருந்தாக உள்ளது. ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

கொளுத்தும் வெயிலைத் தாங்க முடியாதோருக்கு அம்மைநோய் தாக்குதல் ஏற்படுவது வழக்கம். நுங்கை சாப்பிட்டால் அம்மை வராமல் தடுக்கலாம். மேலும், ஆண்மையைத் தூண்டக்கூடியதாகவும், பெண்களுக்கு வெள்ளைப்படுதலுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது.

சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலைத் தணிப்பதோடு, உடலில் உள்ள ஏழு தாதுக்களில் ஏற்படக்கூடிய சூட்டைக் குறைத்து குளிர்ச்சியை அளிக்கும்.

Saturday, 26 March 2016

குற்றப் பத்திரிகையில் பகத்சிங் பெயர் கிடையாது

பகத்சிங் தூக்கிலிடப்பட்டு எண்பது ஆண்டுகள் கழிந்தபின்னர், லாகூர் காவல்துறை யினர் அனார்கலி காவல்நிலையத்தின் பதிவு களை ஆராய்ந்து, பகத்சிங் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையைக் கண்டறிந்தார்கள் அதில் பகத்சிங் பெயர் இல்லை.
1928இல் பிரிட்டிஷ் போலீஸ் ஆபிசரைக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையில் பகத்சிங் பெயர் குறிப்பிடப்படவில்லை. பகத்சிங் தூக்கிலிடப்பட்டு 83 ஆண்டுகள் கழித்து, பகத்சிங்கிற்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை என்பதும், குற்றமற்றவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது..
பகத்சிங் நினைவு ஃபவுண்டேஷன் தலைவர் இம்தியாஸ் ரஷீத் குரேசி என்பவர், பிரிட்டிஷ் காவல் கண்காணிப்பாளர் ஜான் பி சாண்டர்ஸ் கொல்லப்பட்ட வழக்கு சம்பந்தமாக, பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் சான்றிட்ட நகலைக் கோரி மனுச் செய்திருந்தார்.
பகத்சிங் மேற்படி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 23 வயதாக இருக்கும்போதே, 1931இல் லாகூர் சாத்மான் சௌக் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்டு 80 ஆண்டுகள் கழித்து, ஒரு நீதிமன்ற ஆணையின் கீழ் லாகூர் காவல்துறையினர் அனார்கலி காவல்நிலையத்தின் பதிவுருக்களை ஆராய்ந்து பார்த்து, சாண்டர்ஸ் கொல்லப்பட்டது சம்பந்தமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
உருது மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த முதல் தகவல் அறிக்கை அனார்கலி காவல் நிலையத்தில் 1928 டிசம்பர் 17 அன்று மாலை 4.30 மணிக்கு இரு `அடையாளம் தெரியாத துப்பாக்கி வைத்திருந்தவர் (Unknown gunmen)களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட் டிருந்தது. அனார்கலி காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர்தான் இந்த புகாரின் முறையிடுபவரும் கண்ணால் கண்ட சாட்சியு மாவார்.
அவர், சாண்டர்ஸைத் துப்பாக்கியால் சுட்ட நபரை அவர் பின்தொடர்ந்ததாகவும், அவர் 5 அடி 5 அங்குலம் உயரம் உடையவ ராகவும், இந்து முகத்தைக் கொண்டவராகவும், சிறிய மீசையுடன் காணப்பட்டதாகவும், ஒல்லியான மற்றும் வலுவான தேகத்தைப் பெற்றவராகவும், வெள்ளை பைஜாமாவும், சாம்பல் நிற குர்தா அணிந்திருந்ததாகவும், சிறிய கறுப்புநிறத் தொப்பி அணிந்திருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
நீதிமன்றம் மேற்படி முதல் தகவல் அறிக்கையின் நகலை குரேசிக்குக் கொடுத்திருக்கிறது. குரேசி இது தொடர்பாக, பகத்சிங் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதிகள் அடங்கிய நடுவர்மன்றம் வழக்கில் 450 சாட்சிகள் பட்டியலிடப்பட்டிருந்த போதிலும் அவர்களை விசாரிக்காமலேயே பகத்சிங்கிற்கும் மற்றவர்களுக்கும் மரண தண்டனை விதித்தது என்றும், பகத்சிங் சார்பில் வாதாடிய வழக்குரைஞருக்கு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பே அளிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
குரேசி, லாகூர் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை மீளவும் நடத்தவேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங் அப்பழுக்கற்றவர் என்பதை நிறுவிட நான் விரும்புகிறேன், என்று அவர் கூறினார். லாகூர் உயர்நீதிமன்றம், இவ்வழக்கை விசாரிப்பதற்காக ஒரு விரிவான அமர்வாயத்தை அமர்த்தக்கோரி, தலைமை நீதியரசருக்கு அனுப்பி இருக்கிறது.
நன்றி: விடுதலை26/03/16

Friday, 25 March 2016

கைகள் இல்லாத பிள்ளைக்கு உதவுங்கள்

பார்த்தவர்களை அழ வைக்கும் பரிதாபத்துக்குரிய பிள்ளை.
பார்ப்பதற்கு துரு துரு என்று ஓடும் இந்த 6 வயது அழகு ராஜாவை நேரில் பார்த்ததும் ஆச்சரியம். டவுசரும் சட்டையும் அணிந்து இருந்தான். அவனது கைகளை காணவில்லை.
சட்டையை கழட்டியதும் துக்கமும், துயரமும் தொண்டையை அடைத்துக்கொள்ள நம்மை அறியாமலேயே கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
வலது கை முற்றிலுமாக இல்லை. இடது கை சுமார் 4 அங்குலம் மட்டும் சதை துண்டமாக தொங்கி கொண்டிருக்கிறது.
வலது காலும் கோணல் மாணலாக மூன்றாக வளைந்து...கடவுளே என்ன இது? இப்படி ஒரு படைப்பா? என்று படைத்தவனை நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் மேலூர் கிராமத்தில் ஒரு சின்னஞ்சிறிய கீற்று குடிசை தான் இந்த பரிதாப சிறுவனின் உலகம்.
தாய் பாண்டியம்மாள். வாழ்க்கையில் வசந்தத்தை அனுபவிக்க வேண்டிய காலத்தில் வறுத்தெடுக்கும் வெயிலிலும், வாட்டும் பனியிலும் நாற்று நட்டு, களை பறித்து, கல், மண் சுமந்து குடும்பத்தை தாங்கி நிற்கும் 36 வயதே நிரம்பிய சுமை தாங்கி.
பாண்டியம்மாள் ஏழை குடும்பத்தில் பிறந்து வறுமையோடு போராடியவர். திருமணத்திற்கு பிறகாவது திருப்பு முனை வராதா என்று ஏங்கியவர்!
ஆனால் அதன்பிறகு தான் சோகமே அவரது வாழ்க்கை என்று முடிவானது.
கணவர் மணியோடு பாண்டியம்மாள் நடத்திய இல்லற வாழ்வின் அடையாளமாக முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு அழகு மீனா என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.
அடுத்து பிறந்தவர் தான் இந்த அழகுராஜா. ஆண் குழந்தை என்று மகிழ்ச்சியில் திளைத்தவர்களுக்கு அடுத்த கணமே பேரதிர்ச்சி காத்திருந்தது. உங்கள் பிள்ளைக்கு இரு கைகளும் இல்லை, காலும் ஊனமாக இருக்கிறது என்று டாக்டர் கூறிய வார்த்தையை கேட்டதும் நெருப்பில் தூக்கி போட்டது போல் இருந்தது. வாழ்க்கையின் மொத்த சந்தோசமும் அன்றே எரிந்து சாம்பலாகி போனது.
பிறந்த குழந்தை வாழ்க்கை முழுவதும் முடமாகத்தான் இருக்கப்போகிறது என்பதை உணர்ந்த மணி மனைவியை பிரிந்து சென்றுவிட்டார்.
இப்போது அந்த இரண்டு குழந்தைகளுக்காகவே வாழும் அந்த ஏழைத்தாய் உடைந்து நொறுங்கி அழுவதெல்லாம் ‘என் அழகுராஜாவை எப்படி வளர்ப்பேன்...? என் காலத்துக்கு பிறகு அவனை கவனிப்பது யார்?’ என்று தான்.
அழகு மீனா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3–ம் வகுப்பு படிக்கிறாள். அழகுராஜா இந்த வருடம் 1–ம் வகுப்பு.
காலையில் விவசாய வேலைக்கு புறப்படுவதற்கு முன்பு மகனை தூக்கி சென்று பள்ளியில் விடுகிறார். மாலையில் தூக்கி வருகிறார்.
வீட்டில் தாய் உணவு ஊட்டுகிறார். பகலில் பள்ளியில் அழகு மீனா தன் தம்பிக்கு தாய்போல் அருகில் அமர்ந்து சோறு ஊட்டுகிறார். அதை பார்க்கும் ஒவ்வொருவரது இதயமும் இரங்கும்.
இயற்கை உபாதையை கழிப்பது முதல் கைகள் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் தாய் பாண்டியம்மாள் தான் செய்து வருகிறார்.
எதிர்காலத்தை பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல் பரிதாபமாய் பார்த்த அவனிடம் தம்பி, உன் பெயர் என்னப்பா? என்றதும் ‘அழகு ராஜா’ என்று அழகாக சொல்கிறான். என்ன படிக்கிறே என்றதும் ‘ஒண்ணாம் வகுப்பு’ என்று படு சுட்டியாக பதில் கூறினான்.
இப்போது தான் இடது காலால் எழுத பழகி கொண்டிருக்கிறான். ‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு கிளை பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா...?’– என்று குறைகள் ஆயிரம் இருந்தாலும் என் பிள்ளை என் பிள்ளை தான் என்று மகனை அணைத்து மகிழ்கிறார் தாய் பாண்டியம்மாள்.
மகனின் வருங்கால வாழ்க்கைக்கு ஏதாவது வழி பிறக்குமா? என்ற ஏக்கத்தோடு இருக்கும் பாண்டியம்மாளுக்கு உதவிக்கரங்கள் நீண்டால் கைகள் இல்லாத அழகு ராஜாவுக்கு கைகொடுத்தது போல் இருக்கும் (தொடர்புக்கு: 7402508264).
நன்றி: மாலைமலர் 25/03/16

Thursday, 24 March 2016

சிங்கப்பூரில் தானியக்க (ATM) வங்கி இயந்திரங்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூர் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான தானியக்க (ATM) இயந்திரங்களில் தமிழிலும் பணப் பரிவர்த்தனைக்கு வசதி செய்யப்படும் என்று DBS அறிவித்துள்ளது.
DBS, POSB தானியக்க வங்கி இயந்திரங்களில் இதுவரை ஆங்கிலம், மலாய், மாண்டரின் மொழிகள் மட்டுமே இருந்து வந்தனஅதனால் தமிழ் மொழி மட்டுமே தெரிந்திருந்தவர்கள் வங்கி இயந்திரங்களை பயன்படுத்த சிரமப்பட்டனர். வங்கி இயந்திரங்களில் தமிழ் வேண்டும் என்ற வேண்டுகோளை அத்தகையோர் பல ஆண்டுகளாக விடுத்து வந்தனர்
சிங்கப்பூர் முழுவதும் உள்ள தானியக்க வங்கி இயந்திரங்களை DBS, POSB வங்கிகள் மேம்படுத்தி வருகின்றனஅதன் ஒரு பகுதியாக சுமார் 1100 தானியக்க வங்கி இயந்திரங்களில் தமிழிலும் பணப் பரிவர்த்தனைக்கு வசதி செய்யப்படவுள்ளது. 
அதற்கான பணிகள் இவ்வாண்டு ஜூனில் பூர்த்தியாகும் என்று DBS இன்று அறிவித்தது.மூத்தவர்கள் தானியக்க வங்கி இயந்திரத்தை பயன்படுத்துவதை எளிமையாக்கவும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளனபல மாதங்களாக நடத்தப்பட்ட முன்னோடி ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன 
தானியக்க வங்கி இயந்திரங்களில் தமிழைப் புகுத்துவதற்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டது வங்கிதமிழாக்கம் சுருக்கமாகவும்,
எளிமையாகவும் இருக்க வேண்டுமென்பதற்காக சுமார் 150 மணி நேரம் செலவிடப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது
DBS வங்கியைத் தொடர்ந்து மற்ற முக்கிய வங்கிகளும் அதன் தானியக்க இயந்திரங்களில் தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ் மட்டுமே தெரிந்த மூத்த குடிமக்களுக்கும், வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அது அனுகூலமாக விளங்கும்.

DBS, POSB தானியக்க வங்கிகளில் தமிழ் (வீடியோ)



                                                                                                        நன்றி: செய்தி 21/03/16, சிங்கப்பூர்.

ஒரே செடியில் 3 காய்களை விளை வித்து அதிசயம்

சுண்டைக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரே செடியில் கத்தரிக்காய், மிளகாய், தக்காளி ஆகிய 3 காய்களை விளை வித்து புதுச்சேரியைச் சேர்ந்த தந்தை-மகள் சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரியை அடுத்த கூடப்பாக் கத்தைச் சேர்ந்தவர் டி.வெங்கடபதி. இவர், விவசாயத்தில் ஆராய்ச்சி செய்து, கனகாம்பரம் பூ செடிகளில் பல்வேறு ரகங்களை உருவாக்கி உள்ளார்.
இப்போது அனைத்து நிலங்களுக்கும் ஏற்ற வகையிலான சவுக்கு ரகங்களை உருவாக்கிக் கொடுத்து வருகிறார். சாகுபடியில் விவசாயிகள் லாபம் ஈட்டும் வகையில் பல்வேறு புதிய ரகங்களை உருவாக் கிக் கொண்டே இருக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பங் களை கற்றுக் கொண்டு, அதைச் செயல்படுத்துகிறார்.
இவரது சேவைக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இவரை டில்லிக்கு வரவழைத்து பாராட்டியுள்ளார். இவரது ஆராய்ச்சிகளின் வழிமுறைகளும், ஆராய்ச்சிகளின் முடிவுகளும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இவரது விவசாய சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மசிறீ விருதும் வழங்கி உள்ளது.
ஒரே செடியில் 3 காய்கள்: அணுக்கதிர் வீச்சு மூலம் செடிகளை உருவாக்கி வரும் வெங்கடபதி, இதற்காக கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குச் சென்று நவீன ரக செடி வகைகளை உருவாக்கி வருகிறார். தற்போது சுண்டைக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரே செடியில் கத்தரி, மிளகாய், தக்காளி விளைவித்துள்ளார். கலாம் கத்தரி, மோடி மிளகாய், சோனியா தக்காளி என அவற்றுக்கு பெயரிட்டுள்ளார்.
கத்தரி செடியின் ஆயுள் காலம் 6 மாதம். மழைக்காலங்களில் பல்வேறு நோய்கள் தாக்கி வேர்கள் அழுகி செடிகள் இறக்கின்றன. 6 மாத கத்தரி செடியில் இதன் மகசூல் 4 முதல் 8 கிலோ மட்டும் கிடைக்கும். இதனால் இவற்றை நவீன ரக ஆய்வின் மூலம் உருவாக்கி உள்ளார்.
தந்தைக்கு உதவும் மகள்: இவரது மகள் ஸ்ரீலட்சுமியும் 7 வயது முதலே தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார். உயர்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கத்தரியை உருவாக்கி உள்ளார். இதுகுறித்து வேங்கடபதி, அவரது மகள் சிறீலட்சுமி ஆகியோர் கூறியதாவது:
சுண்டக்காயில் பல வகைகள் உள்ளன. முதலில் ஜப்பான், கொரியா, நாடுகளில் தான் இதன் தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் காய்க்கும் இனத்தில் வேர்ச் செடியாக வைத்து கத்தரி செடிகளை ஒட்டுமுறையில் வளர்க்கின்றனர்.
இதற்காக சுண்டைக்காய் செடியை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காமா கதிர்வீச்சு செலுத்தி சோதித்தபோது, காய் காய்க்காத இனம் உருவாகியது. இதில் செடிகள் வீரியமாக வளர்கின்றன. அவற்றில் கத்தரி இனத்தை ஒட்டு வைத்து பார்த்த போது, மிக வேகமாக வளர்ந்தன. இதன் மூலம் 6 மாதங்களில் 12 முதல் 18 கிலோ வரை காய்கள் கிடைத்தன.
இவற்றின் ஆயுள் காலம் 3 ஆண்டுகள் ஆகும். வேர்ச் செடி ஆதலால் எந்த நோயும் தாக்காது. மேலும் காய்க்காத சுண்டைக்காய் செடியில் ஒட்டு முறையில் 3 விதமான காய்கள் கத்தரி, மிளகாய், தக்காளி விளைவித்து சோதனை செய்துள்ளோம். இவை மூன்றும் ஒரே வகையான குடும்பம் என்பதால் 3 இனங்களும் சுண்டைக் காயில் ஒட்டி வளர்கிறது.
காய்கள் காய்க்காத சுண்டைக்காய் இனத்தை நாங்கள் வடிவமைத் துள்ளோம். அதன் சக்தி செடிகள் வளர்வதற்கே பயன்படுகிறது எனத் தெரிவித்தனர்.                                                                 நன்றி:விடுதலை ஞாயிறு மலர் 19/03/16

Wednesday, 23 March 2016

லீ குவான் இயூ அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம் செலுத்துவோம்!

தமிழ் மொழியையும், தமிழர்களையும் சிறப்பாக வாழவைக்கும் ஒரு நாடு என்றால் அது சிங்கப்பூர்!

தமிழர்களுக்கு உரிய மரியாதையும், ஆட்சி அதிகாரத்தில் சமத்துவமான அங்கிகாரம் கொடுக்கும்  நாடு.

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கி தமிழை வாழவைக்கும் நாடு.
தமிழர்களை தமிழ் கற்க ஊக்குவிக்கும் நாடு.

தமிழை வளர்க்க நிதி அளித்து அதனை சரிவர செயல்படுத்திடும் ஒரு நாடு.

இவை அனைத்துக்கும் காரணமாக இருந்தவர் நவீன சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ அவர்கள். அவரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று (23/03/2016).

திரு லீ குவான் இயூ அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம் செலுத்துவோம்! அவர் விட்டு சென்ற மனித சமத்துவத்தை போற்றுவோம்! அதுவே நாம் அவருக்கு செலுத்தும் நன்றி.
-தஅ-

Monday, 21 March 2016

யார் தேசதுரோகி? - கன்னையாகுமாரா ? இந்து மகா சபாவா?

JNU மாணவர் சங்க தலைவர் கன்னையாகுமார் டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி நடைப்பெற்ற அப்சல்குரு தூக்கு மற்றும் இந்தியாவில் தூக்குத்தண்டனைக்கு எதிரான கருத்தரங்கத்தில் பேசும்போது இந்தியாவுக்கு எதிராகவும் பேசினார்; என்று தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு பின்பு பிணையில் வெளிவந்திருக்கும் கன்னையாகுமாருக்கு எதிராக மத்திய அரசிலிருந்து பலரும் கண்டனமும் கருத்தும் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் கன்னையாகுமார்  அன்றிலிருந்து இன்று வரை நான் அப்சல் குருவை ஆதரித்தும்  இந்தியாவுக்கு எதிராகவும் பேசவில்லை. தூக்கு தண்டனை பற்றி தான் பேசினேன் என்று கூறுகிறார்.

கன்னையாகுமார் கூறுவதை உண்மை என்று நிருபிக்கும் வகையில் அவரை கைது செய்யும் போது ஆதாராமக காட்டிய காணொலி தற்போது மோசடி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வீடியோ மோசடி

அந்தக் காணொலியில் உள்ள  குரல்கள் செயற்கையாக பதிவு செய்யப்பட்டு உட்புகுத்தப்பட்டவை என்று அய்தராபாத் அதிநவீன தேசிய பரிசோதனைக் கூடம் (Central Forensic Science Laboratory)  கண்டறிந்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

கன்னையா குமார் இருக்கும் காணொலியில் உள்ள உண்மையான குரல் பதிவுகள் அகற்றப்பட்டு, அதன் பிறகு தனியாக சிலரின் குரல்கள் அங்கு சேர்க்கப்பட்டுள்ளன. காணொலியின் பல இடங்களில் இரண்டாம் மூன்றாம் நபரின் குரல்கள் வெவ்வேறு இடங் களில் பதிவுசெய்யப்பட்டு பிறகு கன்னையாகுமாரின் காணொலியில் இணைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் அய்ந்து இடங்களில் வெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அவசர அவசரமாக செய்யப்பட்ட இந்த மோசடி வேலையில் பல்வேறு தவறுகள் உள்ளன. இதை மோசடி செய்தவர்கள் கவனிக்கத்தவறிவிட்டனர் என்று முடிவுகளை வெளியிட்டுள்ளது.

காணொலியைப் பதிவு செய்த விஷ்வ தீபக் ராஜினாமா

அதற்கு முன்பாகவே காணொலி மோசடியாக மாற்றப்பட்டதை கண்டித்து காணொலியைப் பதிவு செய்த விஷ்வ தீபக் தனது தலைமை எடிட்டர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜி-டிவியில் இருந்து விலகியுள்ளார்.  டில்லி பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் மோசடி நடந்துள்ளதை விளக்கியுள்ளார். 

மோசடி வீடியோ பின்னணியில் ஸ்மிருதிரானியின் தோழி

மோசடி வீடியோ பின்னணியில் ஸ்மிருதிரானியின் தோழி ஷில்பி திவாரி என்பவர் செயல்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷில்பி திவாரி  மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு மிகவும் நெருக்க மானவர். அவர்தான் சமூக ஊடகங்களின் வாயிலாக திருத்தப்பட்ட காட்சிப்பதிவுகளை வெளியிட்டு பரப்பியுள்ளார். அமேதியில் நடை பெற்றமக்களவைத் தேர் தலில் ஸ்மிருதி இரானியின் தேர்தல் நிர்வாகியாக செயல்பட்டுவந்துள்ளார்.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு ஆலோசகர் நியமனத்தில் அவருக்காக கல்வித்தகுதியும் தளர்த்தப்பட்டு  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெளிவரும் உண்மைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு எதிராகவும்  கன்னையாகுமாருக்கு ஆதரவாகவும் வருகிறது.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. கன்னையாகுமார் குற்றம் செய்திருந்தால் தண்டனை வழங்கட்டும். தவறில்லை ஆனால் பொய்யான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு மாணவனை கைது செய்து அவனை தண்டிக்க  ஆதாரத்தை தேடும் காவல்துறையும் மத்திய அரசும். இந்தியாவின் தேசபிதாவான மகாத்மா காந்தி கொல்லப்பட்ட தினத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய இந்து மகா சபாவினரை கைது செய்யவில்லையே ஏன்?

கருப்பு தினம்’ 

குடியரசு தினத்தை கருப்பு தினம்என்று கூறி இந்திய அரசியலமைப்புக்கு எதிராக போராடிய இந்து மகா சபாவினர்.

30 ஜனவரி 2016 அன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை இனிப்பு வழங்கி மேளதாளத்துடன் கொண்டாடியுள்ளார்கள். 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தில் 30 ஜனவரி 2016  அன்று  குழுமிய இந்து மகா சபாவினர் இந்தி திரைப்படப் பாடல்களை சத்தமாக ஒலிக்க விட்டு, மேளதாளங்களுடன் உற்சாகமாக நடனமாடி இனிப்புகளை பரிமாரி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தை கோலாகலமாகக் கொண்டாடினர்.

நாட்டின் நாயகன் நாதுராம் கோட்சே

இந்த கொண்டாட்டம் குறித்து இந்து மகா சபாவின் தேசிய துணை தலைவர் பண்டிட் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாட்டின் நாயகன் நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுக் கொன்ற இந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் இனிப்புகள் வழங்கியும், காப்புகள் கட்டியும், காந்தி இறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மக்களை அழைத்து நடனமாடச் சொல்லியும் கொண்டாடுவோம். இது எங்களுக்கு ஒரு திருவிழா என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “மதசார்பற்ற அரசியலமைப்பு என்ற கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. இந்தியா அதிகாரப்பூர்வமாக  இந்து நாடு என்று அறிவிக்கும் போது, கோட்சே இந்தியாவின் நாயகனாக அறிவிக்கப்படுவார். அப்போது, காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம் தேசிய விழாவாக கொண்டாடப்படும்.என்றார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்து மகா சபாவினரின் இந்த சர்ச்சைக் கருத்தும் தேசவிரோத  நடவடிக்கையின் மீதும்  ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இவர்களை  தேசத்துரோக வழக்கில் கைது செய்யவில்லை?

இவர்கள் தான் கடந்த ஆண்டு மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று நாடு முழுவதும் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தில் கோட்சேவின் சிலையை நிறுவப் போவதாகக் கூறி அதற்காக பூமி பூஜை நடத்தினார்கள்.

தூக்கு தண்டனையை பற்றி  பேசிய மாணவனை  தேச விரோத வழக்கில் கைது செய்து அவனை இந்திய நாட்டுக்கு எதிரி போல் சித்தரித்து  பேசும் மத்திய பாஜக அரசின் அமைச்சர்கள், ஊடகங்கள் இணையதள இளைஞர்கள். ஏன் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற தினத்தை கொண்டாடியும், நாதுராம் கோட்சேவுக்கு சிலை  நிறுவ முயற்ச்சிக்கும்   இந்து மகா சபாவினர்களை கைது செய்யவில்லை? விமர்சிக்கவில்லை? கண்டிக்கவில்லை?

ஏன் இந்த மவுனம்? மதசார்பற்ற நாட்டை மதம் சார்ந்த நாடாக மாற்ற முயற்ச்சி செய்பவர்களுக்கு தரும் ஆதரவா?

இதனால் சாதரண மக்களுக்கும் எழும் சந்தேகம் என்னவென்றால் இந்தியாவில் தேசதுரோகி என்றால் யார் ?

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நான் நடப்பேன் என்று கூறும் கன்னயாகுமார் தேச துரோகியாஅல்லது

இந்திய அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்டு காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தை கொண்டாடும் இந்து மகா சபாவினர் தேச துரோகியா?

மத்திய அரசுதான் மக்களுக்கு விளக்கம் தரவேண்டும். ஆனால் தருவார்களா?
- தஅ

Friday, 18 March 2016

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கு இன்னுமோர் ஆதாரம்!

எகிப்து நாட்டின் பிரமிடுகளைக் கட்டியவர்கள் தமிழர்கள்; ஆண்டவர்கள் (மன்னர்கள்) தமிழர்கள், கிளியோபாட்ரா தமிழ்ப் பெண் என்பதற்கான பலச் சான்றுகளைக் காட்டி முன்னர் எழுதியிருந்தோம்.
அதை இன்னும் உறுதிசெய்யும் ஆதாரம் ஒன்று அண்மையில் தருமபுரி அருகில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சித்தேரி மலையின் தொடர்ச்சியான போடுமலையில் கிடைத்துள்ளது.
உருளை வடிவ கல்வட்டங்கள் இங்கு கிடைத்துள்ள ஆதாரமாகும்.
இந்த உருளை வடிவக் கல்வட்டம், எகிப்தில் கிடைத்துள்ள உருளை வடிவக்கல் வட்டத்தை ஒத்து உள்ளது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
கல்திட்டை அல்லது கல்லறை அமைக்க இக்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது அரிய வகை தடயமாகும். இதன்மூலம் தமிழர்கள் எகிப்தில் பரவி வாழ்ந்து ஆண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- (ஆதாரம்: ‘தினமணி’ 26-.12.2015, 7ஆம் பக்கம்)
 -நன்றி மஞ்சை வசந்தன் 

Thursday, 17 March 2016

செய்யக்கூடாதவை

குழப்பத்தில், கோபத்தில், அவசரத்தில் முடிவெடுக்கக்கூடாது:

நாம் ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது. மன உளைச்சலில் முடிவெடுக்கக் கூடாது. உணர்ச்சி வசப்பட்டுச் செயல்படக்கூடாது. இது போன்ற மனநிலையில் எதையும் செய்யாது தனிமையில் அமைதியாய் இருந்து, முடிந்தால் தூங்கி எழுந்து, தெளிந்த மனநிலையில் முடிவுகள் மேற்கொண்டால், பல இழப்புகள், கேடுகள், தப்புகள், பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்பதற்றமான மனநிலை, உணர்ச்சிவயப்பட்ட நிலை, கோபம் கோலோச்சும் நிலை, தூக்கக் கலக்கம், குழப்ப நிலை, உடல் நிலை சரியில்லாத நிலைகளில் முடிவெடுக்காமல் தள்ளிப் போடுவதே நல்ல முடிவு ஆகும்.

தலைச்சுற்றல் உள்ளவர்கள் காபி சாப்பிடக் கூடாது:

காபி சாப்பிட்டால் பித்தம் அதிகமாகும். பித்தம் கூடினால் தலைச்சுற்றல் ஏற்படும். எலுமிச்சைச் சாற்றில் சீரகப் பொடிகலந்து சிறிதளவு உப்பு சேர்த்துப் பருகினால் நலம் கிடைக்கும். மது, புகை அறவே நீக்கப்பட வேண்டும். இறுக்கமான ஆடைகாளால் இரத்தவோட்டம் பாதித்து, உடலுக்குத் தேவையான உயிர்வளி (ஆக்ஸிஜன்) கிடைக்காமல் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, உடை தளர்வாக இருப்பது நல்லது. காலையில் இஞ்சியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி, எலுமிச்சை இவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். நெல்லிக்காய் இருவேளை சாப்பிடுவது தலைச்சுற்றலை நீக்கும்.

தலைச்சுற்றலுக்குச் சரியான காரணத்தை ஆராய்ந்து, மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருந்து சாப்பிட வேண்டும். தனக்குத்தானே மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது. தலைச்சுற்றல் பல காரணங்களால் ஏற்படும். காது பாதிப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு அடைப்பு, நீர் சரியாகக் குடிக்காமை, சத்துக் குறைவு, சரியாக உண்ணாமை போன்ற பல காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படும்.

எனவே, மருத்துவரிடம் காட்டாயம் ஆலோசனை பெற்றே மருந்து சாப்பிட வேண்டும். மருத்துவரை சந்திக்க காலம் கடத்தக் கூடாது.

பாலைத் தவிர வேறு எதையும் குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது:

பிறந்த குழந்தைக்கு 7 மாதங்கள் வரை பாலைத் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. பால் தாய்ப்பாலாக இருப்பதே சிறந்தது. பசும்பால் சுத்தமாக இயற்கையாகக் கிடைப்பதாயின் தாய்ப்பால் கிடைக்காதபோது கொடுக்கலாம்.

மார்பகத்தைச் சுத்தம் செய்யாது பால் கொடுக்கக் கூடாது

பெண்ணின் மார்பகம் இரண்டு மூன்று துணிகளால் இறுக்க மூடப்படுவது வழக்கம். எனவே, வியர்வை அதிகம் இருக்கும். அழுக்கும் அதிகம் சேரும். அந்த நிலையில் அப்படியே குழந்தைக்குப் பால் கொடுத்தால் குழந்தைக்கு நோய் தொற்றும். குழந்தைக்கும் வாய் வைக்கப் பிடிக்காது வெறுத்து ஒதுக்கும். எனவே, ஒருநாளைக்கு மூன்று முறையாவது மார்பகத்தைச் சுத்தம் செய்து பால் கொடுப்பது தாய்க்கும் நல்லது, குழந்தைக்கும் நல்லது.

கம்பளி உடை குழந்தைக்குக் கூடாது

குழந்தையின் உடல் மிகவும் மென்மையானது. எனவே, மென்மையான பருத்தி ஆடைகளையே உடுத்த வேண்டும். வெய்யிற் காலங்களில் எந்த அளவிற்கு ஆடையைக் குறைக்க முடியுமோ அந்த அளவிற்குக் குறைக்க வேண்டும். குழந்தையின் ஆடைகளைக் காரமான சோப்புகளைக் கொண்டு துவைக்கக் கூடாது. அது குழந்தையின் தோலைப் பாதிக்கும். குழந்தையைக் குளிப்பாட்டும் சோப்பால் அதன் துணிகளைத் துவைத்து, கொதிக்கும் வெந்நீரில் அலசி வெய்யிலில் நன்றாக உலர்த்தி அணிவிக்க வேண்டும்.  
நன்றி: உண்மை