Tuesday, 12 July 2016

பி.கே. படத்தின் சாதனை



2012ம் ஆண்டில் படப்பதிவு தொடங்கப்பட்டு 2014ஆம் ஆண்டில் முடிந்தது.
6.6.2014இல் வெளியிட திட்டமிடப்பட்டு, ஜூலை 2014இல் வெளியிடப்பட்டு வழக்கை எதிர்கொண்டது.

ராஜஸ்தான் நீதிமன்றத்தில் (போஸ்டரில் நிர்வாணம், வக்கிரம் என்றுகூறி) தடைகோரி பொதுநல வழக்கு உச்சநீதிமன்றம் படத்துக்குத் தடைவிதிக்க மறுத்ததுடன் படத்தை வெளியிடலாம் என்று தீர்ப்பளித்தது..

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து டிசம்பர் 2014இல் வெளியிடப்பட்டது.

தொடக்கத்தில் 4844, பிறகு இந்தியாவில் 5200, அயல்நாடுகளில் 844, திரையரங்குகளில் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் வெளியானது. இந்தியாவில் .பி., பிகார் மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஜூலை 2014ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பிகே படம் பன்னாட்டளவில் 11கோடி அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 741.18 கோடி) இலாபத்தைக் கொடுத்த படமாக பிகே படம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படம் கடவுள் மதம் மூடநம்பிக்கைகளைச் சாடு சாடு என்று சாடி, கிண்டலும் கேலியும் செய்தது என்பது குறிப்பிடத் தக்கதாகும். இத்தகு படம் 741 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்க தாகும். பி.கே. திரைப் படத்தில் ஒருகாட்சி!

கடவுளே உன்னை எல்லா மத அடிப்படையிலும் பிரார்த் திக்கிறேன். நான் முட்டி போட வேண்டுமா? சலாம் போட வேண்டுமா? நமஸ்காரம் செய்ய வேண் டுமா? எல்லாவற்றையும் செய்கிறேன். மாலையில் விரதம் இருக்கிறேன். காலையில் விரதம் இருக்கிறேன். உடம்பை சாட்டையால் அடித்துக் கொள்கிறேன்

இத்தனையும் செய்து ஏன் எனது கோரிக்கையைக் கேட்க மறுக்கிறாய்? வாழ வழியின்றித் தவிக்கிறேன் நண்பர்கள் இல்லை. நான் எந்த வகையில் தொழ வேண்டும்? யாரைத் தொழ வேண்டும் என்று நீதான் கூற வேண்டும்என்று நடிகர் அமிர்கான் பி.கே. திரைப்படத்தில் கதறும் காட்சியில் கடவுள் வழிபாட்டின் அர்த்தமற்ற சங்கதியைப் படம் பிடித்துக் காட்டி பக்தர்களையும் சிந்திக்க வைக்கிறார்

நன்றி: விடுதலை ஞாயிறு மலர் 10/07/2016

No comments:

Post a Comment