இதய நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் பேஸ் மேக்கர் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் சுவாசிக்கக்கூடிய இன்சுலின் கருவியை கண்டுபிடித்த ஆல்பிரட் இ மான் (Alfred
E. Mann) தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார்.
சாதாரண மளிகைக்கடைக்காரரின் மகனாக அமெரிக்காவில் பிறந்த மான், வரிசையாக பல தொழில்களை தொடங்கினார்.
அவர் தொட்டதெல்லாம் வெற்றிகரமாக துலங்கிதையடுத்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிலில் இறங்கினார்.
இதய நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் பேஸ் மேக்கர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் சுவாசிக்கக்கூடிய இன்சுலின் கருவி போன்றவற்றை இவரது மான்கைன்ட் நிறுவனம் கண்டுபிடித்தது. பின்னர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான சோலார் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை தயாரித்த இவர் பெரும் கொடையாளராகவும் விளங்கினார்.
MannKind Corporation என்ற நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்துவந்த ஆல்பிரட் இ மான் தனது 90-வது வயதில் கடந்த வியாழக்கிழமை (25
February 2016) மரணம் அடைந்தார்.
அவர் கண்டுபிடித்த பேஸ் மேக்கர் மற்றும் இன்சுலின் ஏற்றும் கருவியால் இவ்வுலகில் பல கோடி மக்கள் பயன்பெற்று உயிருடன் வாழ்வதற்கு காரணமாக இருந்த மறைவுற்ற ஆல்பிரட் இ மான்-க்கு வீரவணக்கம் !
No comments:
Post a Comment