இஸ்ரோவில் பணிபுரியும் 90 சதவீதம் பேர் தாய்மொழியில் படித்தவர்கள் மயில்சாமி அண்ணாதுரை தகவல்
தமிழில் படிப்பதால் யாரும் சோடை போவதில்லை. தாய்மொழியில் படித்ததுதான் என்னுடைய பலம். அதனால் நான் விஞ்ஞானியாக வளர்ந் தேன் என இந்திய விண் வெளி செயற்கைக்கோள் ஆய்வு மையத்தின் தலைமை திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
திருப்பூர் அருகே சிங்கனூர் தாய்த்தமிழ் உயர் நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நேற்று நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: நான் முதல் வகுப்பு படிக்கும் போது, மாட்டுக்கொட்டகையில் தான் படித்தேன்.
என்னை முழுக்க முழுக்க என் பெற்றோர் 11 ஆண்டுகளாக, தமிழில்தான் படிக்க வைத்தார்கள். அதனால் தான், இன்றைக்கு விஞ்ஞானியாக வளர்ந்துள்ளேன். என்னுடைய பலம் தாய் மொழியில் படித்தது தான். குழந்தைகள் தாய் மொழியில் படித்தால் முன்னேறாமல் இருப்பார்கள் என்கிற பெற்றோர் களின் எண்ணம் தவறானது. தமிழில் படிப்பதால், யாரும் சோடை போகப்போவதில்லை.
முதல் 15 ஆண்டுகள் இயல்பானவர்களாக குழந்தைகள் இருக்க வேண்டும். அவர்களை இறுக்க மானவர்களாக மாற் றக்கூடாது. இஸ்ரோவில் பணிபுரியும் 90 சத வீதம் பேர் அவரவர் தாய்மொழியில் படித்தவர்கள் தான் என்றார்.
நன்றி: செய்தி: விடுதலை 08/02/16
சிந்தனை: பிள்ளைகள் ஆங்கில வழியில் படித்தாலும் தாய்மொழி தமிழை மொழிப் பாடமாக தேர்வு செய்து தமிழ் மொழியை கற்றுக்கொடுப்போம் அது புரிந்துணர்வையும், நம் கலாச்சாரத்தையும் வளர்க்க உதவுவது மட்டுமல்லாது. பிள்ளைகளின் சுதந்திரமான சிந்தனையை வளர்ந்து அறிவியலை எளிமையாக புரிந்துக்கொள்ள உதவும்.
No comments:
Post a Comment