Friday 29 April 2016

கள்ளுக்கடை திறப்பது சீமானின் மதுஒழிப்பு!

மது போதைப்பொருள் ஓழிப்பு!
இது நாம் தமிழர்  கட்சி தேர்தல் துண்டறிக்கையில் அச்சிடப்பட்டுள்ளது.


கள்ளுக்கடையை திறப்போம்! மதுவை ஒழிப்போம்!
இது நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன ஒரே குழப்பமாக இருக்கா...
எனக்கும்
அதே குழப்பம் தான்!

சரி சீமான் மதுவை ஒழிப்பாரா? மாட்டாரா?


அவர் வெளியிட்ட வரைவு அறிக்கையை பார்ப்போம்..

பக்கம் 59-ல்
பனங்களையும், தென்னங்களையும் பெயர் மாற்றி பனம்பால், தென்னம்பால் என்ற பெயரில்
தமிழ்த் தேசிய மதுபானமாக அறிவிக்கிறார்.
ஒவ்வொரு ஊரிலும் கள்ளுக்கடைகள் திறக்கப்படும்.

பக்கம் 180 & 183-ல்
மதுவையும், புகையிலைப் பொருட்களையும் முற்றாகத் தடை செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

சரி இறுதியாக என்ன சொல்கிறார் சீமான்?

வெளிநாட்டு மதுபானங்களை தடை செய்வோம்.
உள்நாட்டு மதுபானத்தை விற்பனை செய்வோம்

அதாவது டாஸ்மார்க்கிற்கு பதில்
கள்ளுக்கடையை திறப்போம்.

ஆனால் இப்படி நேரடியாக கள்ளுக்கடையை திறப்போம் என்று கூறினால்.
பெண்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்.

அதனால் “கள்என்று சொல்வதற்கு பதிலாக பனம்பால், தென்னம்பால் என்ற பெயரில் கடைகளையை திறப்போம் என்று கூறுகிறார்.

இதுதான் சீமான் கூறும் “மாற்று அரசியல் அதாவது

“கள்” என்ற சொல்லை மட்டும் மாற்ற மாட்டோம்!
கள்ளுக்கடையை திறந்து செயலும் படுத்துவோம்!

எச்சரிக்கை தமிழர்களே! 

மாற்று அரசியல் என்பது நேர்மையான அரசியலாக இருக்க வேண்டும்.

மதுவையும் ஒழிப்போம்கள்ளுக்கடையையும் திறப்போம்! என்று கூறி
மக்களை ஏமாற்றும் அரசியலாக இருக்கக் கூடாது.
-தஅ-


No comments:

Post a Comment