மற்ற வயதினரைக் காட்டிலும் இளையர்களே கைபேசியை கழிவறையில் அதிகம் பயன்படுத்துகின்றனர். அத்துடன், இருவரில் ஒருவர்தான் கழிவறையை பயன்படுத்திய பின் கைகளைச் சுத்தம் செய்கின்றார். ஆயினும் கைபேசியைச் சுத்தம் செய்வதில்லை எனும் திடுக் கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று. 305 பேரிடம் நடத்திய ஆய்வில் 10ல் ஒன்பது சிங்கப்பூரர்கள் கைபேசிகளைக் கழிவறையில் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர்களில் 10ல் ஒருவர் தான் அதைச் சுத்தம் செய்கிறார் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இப்போக்கு சிங்கப்பூர் இந்தியச் சமுதாயத்திலும் பரவலாகக் காணப்பட்டாலும் ஆய்வு முடிவுகளைக் காட்டிலும் கைபேசியைக் கழிவறையில் பயன்படுத்தும் இந்தியச் சமூகத்தினரின் எண்ணிக்கை சற்றுக் குறைவாகவே உள்ளது.
ஆறில் ஒரு கைபேசியில் மலம் தொடர்பான கிருமி இருப்பதாகவும் கழிவறைகளில் இருப்பதைப் போல 18 மடங்கு கிருமிகள் கைபேசிகளில் இருப்பதாகவும் வேறு சில ஆய்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன. கழிவறையில் கைபேசியைப் பயன்படுத்துவதாக ஒப்புக் கொண்ட நவின், 15, அதை அடிக் கடி சுத்தம் செய்ய சோம்பேரித்தனப்படுவதாகக் குறிப்பிட்டார். முக்கியமான அழைப்புகளை உடனடியாக ஏற்பது தவிர பாடல் கள் கேட்பது குறுஞ்செய்தி அனுப்புவது போன்றவற்றுக்கும் கழிவறையில் கைபேசியைப் பயன்படுத்துவதாகச் சிலர் கூறினர்.
கைபேசிகளைச் சுத்தப்படுத்தக் கோரும் பதாகையைச் சுமந்தபடி சாதிக்கினும் குறிப்பேடுகளை வழங்கியபடி ஆயிஷாவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
நன்றி: தமிழ் முரசு சிங்கப்பூர் 06/04/16
No comments:
Post a Comment