Monday, 25 April 2016

இவர்களை வைத்து அரசியல் செய்யும் சீமான் - எப்படி?



நடப்பது .தி.மு. ஆட்சி.

ஏன் .தி.மு. ஆட்சி இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யவில்லை ? என்று சீமானின் நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டி எழுதவில்லை?


நடிகர் சஞ்சை தத்-யை  பா.. (BJP)  ஆட்சிதான் விடுதலை செய்தார்கள் என்று குறிப்பிடவில்லையே ஏன்? 

பா.. மீது தனி பாசம்  ஏன்?


பா.. (BJP)  ஆட்சிதான் எழுவரையும் விடுவிக்க தடை போட்டுள்ளார்கள் என்று ஏன் குறிப்பிடவில்லை? 

பா..-வின் பெயரை மறைப்பதன் மர்மம் என்ன?


.தி.மு. அரசு; மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை வைத்து எழுவரையும் ஏன் விடுதலை செய்யவில்லை என்று குறிப்பிடவில்லை? 

அதனை எதிர்த்து, ஜெ.அரசை கண்டித்து சீமான் ஏன் போராடவில்லை?

நாம் தமிழர் கட்சி சட்டப்போரட்டத்தை நடத்தவில்லையே ஏன்?

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் சட்டப்போரட்டத்தை நடத்துவார்கள் என்றால் அது ஏமாற்றும் செயல்?

எழுவரையும் விடுவிக்க மறுத்த பா..-வையும் மோடி அரசையும் எதிர்த்து கண்டித்து ஒரு அறிக்கைக்கூட சீமான் வெளியிடவில்லையே ஏன்?

இப்போது நடக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க அரசை குற்றம்சாட்டாமல் அதற்கு முந்தைய தி.மு.க அரசை மட்டும் திட்டமிட்டு குற்றம் சாட்டுவது ஏன்?

சீமானும், நாம் தமிழர் கட்சியும் இப்பிரச்சினையில் உள்நோக்கத்துடன் செயல்படுவதை பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது. இவர்கள் ஈழ தமிழர்களுக்காகவோ, தமிழக தமிழர்களுக்காகவோ சீமான் போராடவில்லை. மாறாக இப்பிரச்சினைகளை பயன்படுத்தி தி.மு.க-வை அழிக்க வேண்டும். மக்கள் மனதில் தி.மு.க எதிர்ப்பினை உருவாக்க வேண்டும்.

ஏன் தி.மு.க-வை அழிக்க வேண்டும்?

தி.மு.க-வை அழித்தால் மட்டும் தான் தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் சாதிக் கட்சிகள் தமிழ் நாட்டில் நன்றாக வேர்பிடித்து வளர முடியும்.

அதனால் தான் சீமான் திராவிடர்கள் வேறு, தமிழர்கள் வேறு என்று வரலாற்றை திரித்து பொய் கூறுகிறார்.

தமிழன் மட்டும்  நாட்டை ஆள வேண்டும் என்று கூறி மற்ற எந்த குடிமகனும் நாட்டை ஆள உரிமை கிடையாது என்று சொல்லி இனவெறியை வளர்க்கிறார். 

இவைதான் பிரித்தாலும் சூழ்ச்சி என்பதாகும் அதை பயன்படுத்தினால் மட்டும் தான் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தமிழ் நாட்டில் வளர முடியும்.

அதற்குதான் சீமான் துணை நிற்கிறார். சில நேரங்களில்  பொதுவாக சில வார்த்தைகள் பா.ஜ.க வை திட்டுவார். அது வெறும் கண் துடைப்பு. அதற்கு உதாராணம்தான்  இந்த எழுவர் விடுதலை பிரச்சினையில் அ.தி.மு.க பா.ஜ.கவை எதிர்த்து போராடாமல் மவுனமாக இருப்பது.

இப்படி ஏமாற்றும் சீமானின் போலி அரசியலை புரிந்துக் கொள்ளுங்கள்.

தமிழர்களின் உண்மை உணர்வுகளை அழிக்க புதிதாக தோன்றியுள்ள நோய் கிருமிதான் சீமான்

தமிழகத்தில் தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க உரக்க பேசுபவர்தான் சீமான்; எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒரு கொடிய நோய் கிருமி.

எச்சரிக்கை தமிழர்களே!

சீமான் போன்ற போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்!
-தஅ-

No comments:

Post a Comment