Thursday, 14 April 2016

தமிழ்மொழியை அவமானப் படுத்தாதீர்கள்!

இன்று தமிழர்கள் சித்திரை-1 தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழர்கள் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள் அவர்களின் சிந்தனைக்கு:

இந்துமத கதைப்படி தமிழர் ஆண்­டு­களை 60 ஆகப்­ பி­ரித்து ஒவ்­வொரு ஆண்­டுக்கும் ஒவ்­வொரு பெயரிட்டு அழைத்­தார்கள்.

முதல்­ வ­ரு­ட­மான பிர­பவ வரு­டத்தில் தொடங்கி 60 ஆவது வரு­ட­மான அட்­ச­ய­வ­ரு­டத்தில் நிறை­வ­டை­கி­றது. இன்­று­ பி­றக்கும் 30ஆவது வரு­டத்தின் பெயர் துர்­முகி என்­ப­தாகும். இந்த 60 ஆண்டுகளின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிரதத்தின் பெயர்கள்.

தமிழ் வருடத்தின் பெயர்கள் எப்படி சமஸ்கிரதத்தின் பெயரில் அழைக்கலாம்? என்று சிந்தித்ததுண்டா?

இந்துமத அடிப்படையில் கொண்டாடப்படும் சித்திரைப் புத்தாண்டு எப்படி இஸ்லாமியகிருஸ்துவ தமிழர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்?

இந்த 60 ஆண்டு கணக்குப்படி எப்படி தமிழர்களின் வரலாற்றை குறிப்பிட முடியும்? எப்படி உங்கள் வயதை கணக்கிட முடியும்? என்றாவது சிந்தித்ததுண்டா??

தமிழ்ப் புத்தாண்டு தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை உலகுக்கு எடுத்துக்கூறும் வகையில் தொடர்ஆண்டு கணக்காக இருந்தால், தமிழர்களின் வரலாறு உலகம் முழுவதும் தெரிவதற்கும், தமிழினம் உலகின் மூத்தகுடிமக்கள் வாழ்ந்த இனம் என்ற வரலாற்றுக்கு ஒரு ஆதாரமாக இருக்குமே! அதை பற்றி சிந்தித்ததுண்டா??

அதனை கருத்தில்கொண்டு மறைமலை அடிகளார் போன்ற தமிழறிஞர்கள் தை-1 தமிழ் புத்தாண்டாக தமிழர் திருநாளாக கொண்டாட சொல்லி  திருவள்ளுவர் ஆண்டு கணக்கை பின்பற்ற சொன்னார்கள். அவர்களின் கணக்குப்படி இப்போது நடப்பது திருவள்ளுவர் ஆண்டு 2047 (கி.பி 2016+31 : அதாவது கிருஸ்து பிறப்புக்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பிறந்துள்ளார்)

அப்படி பின்பற்றும் போது தமிழ்ப் புத்தாண்டு எல்லா மதத்துக்கும் பொதுவாக இருக்கும் மேலும் எல்லா தமிழர்களும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவார்களே!

தமிழ்ப் புத்தாண்டு என்பது எல்லா தமிழர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் அப்படியிருந்தால் அது தமிழ்ப் புத்தாண்டு இல்லையென்றால் அது ஒரு மதத்தின் பண்டிகை.

சிந்தியுங்கள்!

சமஸ்கிரத பெயர் கொண்ட ஆண்டுகளை தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லி தமிழ்மொழியை அவமானப் படுத்தாதீர்கள்.

60 ஆண்டுகள் தான் தமிழ் ஆண்டுகள் என்று கூறி தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் வேலையை அறிவுக்கு பொருந்தாத வகையில் செய்யாதீர்கள்!

ஒரு மத நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ்ப் புத்தாண்டு என்றுகூறி மற்ற மதத்தை நம்பும் தமிழர்களை பிரிக்காதீர்கள்!

தமிழர்களின் பண்பாடு மனிதர்களை பிரித்து ஆளுவதல்ல! ஒன்றுபடுத்தி மதித்து ஆளுதல்! அதனால் தை-1யை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுங்கள்! திருவள்ளுவர் ஆண்டு கணக்கை பின்பற்றுங்கள்!

மத நம்பிக்கையின்படி சித்திரை-1 யை கொண்டாட வேண்டும் என்று நினைத்தால், சித்திரை திருநாள் என்று கொண்டாடுங்கள்!

ஆனால் சித்திரை-1 தமிழ்ப் புத்தாண்டு என்று கூறி கொண்டாடி தமிழ்மொழியை அசிங்கப்படுத்தி அவமானப் படுத்தாதீர்கள்! 
                                                                                                                                                   -தஅ-

No comments:

Post a Comment